பொள்ளாச்சி: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. டப்பிங் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இச்சூழலில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி உள்ளது.
டீசரில் ஜாதி பிரச்சினை பேசப்படுகிறது. தாழ்த்தப்பட்ட இளம் பெண்கள் கொலையில் டீசர் ஆரம்பமாகிறது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களை கதையின் களமாக இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் குறளின் செய்யுளை அடைமொழியாக கொண்டு இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளது. மேலும் சிவப்பு, கருப்பு, நீல நிறங்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடைசி ஷாட்டில் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியனின் பின்னணியில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நடுநிலைமை என்பது நியாயத்தின் பக்கம் நிற்பது தான் என உதயநிதி பேசும் வசனமும் டீசரில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் கிருஷ்ணன் பணிச் செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் - ஆண்டனி ரூபன், கலை இயக்கம் - வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் - ஸ்டண்ட், C H பாலு - ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி - நடன இயக்குனர் , அனு வர்தன் - ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு - சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX - ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
போடு வெடிய: தனுஷ் - செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல அஜித் பட ஒளிப்பதிவாளர்! இவர் தான்