மகிழ்ச்சி வெள்ளத்தில் "மாமன்னன்" உதயநிதி.. மாரி & வடிவேலுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

Advertising
>
Advertising

Also Read | "நீங்க எனக்கு இன்னொரு அம்மா.." விக்னேஷ் சிவன்! யாருக்கு வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க..

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கியது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. கேக்கில் "படப்பிடிப்பு நிறைவடைந்தது" என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'வாரிசு' புது லுக்கில் தளபதி விஜய்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த செல்ஃபி.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Mamannan Movie Shooting Wrapped

People looking for online information on Mamannan, Mamannan Movie Shooting, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.