உதயநிதி - நித்தி அகர்வால் நடிக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான நேர்த்தியான FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஓவியா, சினேகா, சங்கீதா, பாபா பாஸ்கர்... பிரபல சேனலில் கோலாகலமாக தொடங்கிய நடன நிகழ்ச்சி.!

உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் போக தற்போது புதிதாக, நடிகர் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியில் டைட்டில் கார்டு வென்றவர் நடிகர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.  வெண்ணிற பின்னணியில் மூன்று வெவ்வேறு லுக்கில் உதயநிதி ஸ்டாலின் இந்த போஸ்டரில் தோன்றியுள்ளார். இந்த படத்திற்கு 'கலகத்தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார்.

நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read | Life of பழம்: புது போஸ்டருடன் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 3-வது சிங்கிள் அப்டேட்!

உதயநிதி - நித்தி அகர்வால் நடிக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான நேர்த்தியான FIRST LOOK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Kalaga Thalaivan Movie First Look Poster Released

People looking for online information on Kalaga Thalaivan Movie, Kalaga Thalaivan Movie First Look Poster, Nidhhi Agerwal, Udhayanidhi Stalin will find this news story useful.