உதயநிதி ஸ்டாலின் வசமானது பிரபல தமிழ் நடிகரின் பட உரிமை.. வெளியான புதிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிரபல தமிழ் நடிகர் நடித்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

'RRR' படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன? சிவகார்த்திகேயனின் 'DON' படத்துடன் மோதுகிறதா? முழு விவரம்

உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அரண்மனை3, அண்ணாத்த, ராதே ஷ்யாம் படங்களின் தியேட்டர் உரிமையை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள FIR படத்தின் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.

 

இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். வழக்கறிஞராக மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய  பெண் வேடங்களில் நடித்துள்ளனர்.  கடந்த அக்டோபரிலே FIR படத்தின் அனைத்து படப்பிடிப்பு, பின் தயாரிப்பு பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  FIR படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நேரடியாக OTT-யில் வெளியிடப்படும் என வதந்தி பரவிய போது தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் அஷ்வத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள், முன்னோட்டம் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த,  மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம்  வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம்  ஸ்டண்ட், C H பாலு  ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து  வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன்  ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.  இந்த படத்தின் ஆடியோ லேபிளை Zee Music South வெளியிடுகிறது.

நீண்ட கால தோழியை திருமணம் செய்த "நயன்தாரா - டாப்சி" பட இயக்குனர்! சினிமா பிரபலங்கள் வாழ்த்து

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin bagged FIR movie theatrical rights

People looking for online information on உதயநிதி ஸ்டாலின், FIR movie, Udhayanidhi Stalin will find this news story useful.