சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

Also Read | 'அவன் இவன்' மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ் மறைவு.. கடைசி Reels வீடியோவால் உருகும் ரசிகர்கள்
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சந்தானம்.
சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னாட்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ச்சி பெற்றார். பின்னர் ஹீரோவாக கண்ணா லட்டு திண்ண ஆசையா, தில்லுக்கு துட்டு போன்ற காமெடி திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி மற்றும் டிக்கிலோனா திரைப்படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.
தற்போது ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் என அனைத்து ஜானர்களிலும் சந்தானம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், விக்ரம, மாஸ்டர் படங்களின் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் குளு குளு திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
சந்தானம் நடிக்கும் இந்த குளு குளு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமத்தை சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Also Read | "பட்டத்து இளவரசர Miss பண்ணீங்களா?.." விக்ரம் போஸ்டருடன் வெளியான பொன்னியின் செல்வன் Update