எதிர்ப்பார்ப்பை எகிறவைத்த 2 திரைப்படங்கள்.. தீபாவளி - கிருஸ்துமஸ்-ல் தியேட்டர் ரிலீஸ்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருட தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ்-க்கு வெளியாகவிருக்கும் இரண்டு பெரிய திரைப்படங்கள் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடிப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தற்போது தயார் நிலையில் இருக்கும் திரைப்படங்களை சிலர் OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு திரைப்படங்களின் தியேட்டர் ரிலீஸ் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ள 83 மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவான்ஷி திரைப்படம் நேரடியாக தியேட்டரில்தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யவான்ஷி திரைப்படம் தீபாவளிக்கும், 83 திரைப்படம் கிருஸ்துமஸ்-க்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இரண்டு திரைப்படங்களின் ரீலீஸ் தேதி | two highly expected films locks diwali and christmas release date

People looking for online information on 83, Akshay Kumar, Ranveer Singh, Suryavanshi, Theatre Release will find this news story useful.