அதே 'டெய்லர்' அதே வாடகை... மீம்ஸ் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் இந்த சீசனில் சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதை பிக்பாஸ் கிரியேட்டிவ் டீம் கண்டு கொள்வதாக இல்லை. 70 நாட்களை கடந்தும் கூட இன்னும் பெரிதாக எந்தவொரு டாஸ்க்கும் ரசிகர்களை கவரும்படி பிக்பாஸ் அளிக்கவில்லை. விளம்பரதாரர்களுக்கான ப்ரோமோஷன் டாஸ்க்குகள் மட்டுமே போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

Twitter reacts hilariously to Bigg Boss Creative Team

ஆமாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த பந்தை வைத்துக்கொண்டு தான் குக் மற்றும் கோமாளி இருவரும் சமைக்க வேண்டும் என அந்த போட்டியின் நடுவர்கள் டாஸ்க் அளித்து இருந்தனர். அந்த பந்தை அப்படியே கிரியேட்டிவ் டீம் பிக்பாஸ்க்கு கொண்டு வந்து போட்டியாளர்களை விளையாட வைத்து விட்டனர். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு கிரியேட்டிவ்? என மீம்ஸ் போட்டு பிக்பாஸை செமையாக கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Twitter reacts hilariously to Bigg Boss Creative Team

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.