பிரபல பிக்பாஸ் நடிகர் தனது மனைவியுடன் மறக்க முடியாத சம்பவமொன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது மனைவி நிஷாவுடன் கிராமத்தில் டி.வி.எஸ் எக்ஸ்.எல் வண்டியில் சுற்றி வந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் வாழ்க்கை. இதுபோல டிவிஎஸ் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்து, எனது மனைவி நிஷா அவரது சின்னமன்னூர் கிராமத்தை சுற்றி காட்டுவது. இதுதான் சந்தோஷம்'' என பதிவிட்டுள்ளார்.