குட் நியூஸ் சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் - ஸ்ரீஜா..! வாழ்த்தும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல ஆண்டுகளாகவே, சீரியல் தொடர்களுக்கென்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி பல ஆண்டுகள் கழிந்தாலும் மக்கள் மனதில் அப்படியே நிலைத்து நிற்கும். அதே போல, இதில் நடித்தவர்கள் கூட மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருப்பார்கள்.

tv couple mirchi senthil and sreeja become parents soon
Advertising
>
Advertising

அந்த வகையில், ஏராளாமான ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட தொடர்களில் மிக முக்கியமான ஒன்று, "சரவணன் மீனாட்சி".

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தொடங்கிய சமயத்தில், இதில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வேற லெவலில், இந்த சீரியலை தமிழக மக்கள் கொண்டாடியும் வந்தனர்.
tv couple mirchi senthil and sreeja become parents soon

இதற்கு மத்தியில், இந்த தொடரில் நடித்த போது, செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகியோருக்கு இடையே காதலும் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு, இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், மிகவும் சந்தோசமாகவும் தங்களின் வாழ்க்கையை செந்தில் - ஸ்ரீஜா ஜோடி கழித்து வந்தனர்.

இருவரும் சேர்ந்து ஜோடியாக வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், வளைகாப்பு நடந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

 

விரைவில் தாங்கள் பெற்றோர்களாக போவதாகவும், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் செந்தில் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாகி உள்ள நிலையில், செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tv couple mirchi senthil and sreeja become parents soon

People looking for online information on Mirchi Senthil, Saravanan Meenatchi, Sreeja will find this news story useful.