வாரிசு படத்தின் FDFS.. தியேட்டரில் VIBE ஆன TTF வாசன்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன்.

Advertising
>
Advertising

Also Read | "கிளாசிக் உருவாக்கம்".. துணிவு படம் குறித்து நடிகர் சரத்குமார் போட்ட ட்வீட்.. TRENDING

இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.  டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. ரசிகர்களின் முகத்தை ஒரே அமர்வில் பச்சை குத்த 27 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆனதாக வாசன் கூறியிருந்தார். இதனை பாராட்டி கலாம் உலக சாதனை நிறுவனம் பாராட்டி உலகசாதனை சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில் இன்று வெளியான வாரிசு படத்தினை வாசன் முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுக்கு மத்தியில் அமர்ந்து படம் பார்த்தார். மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க முக கவசம் அணிந்து கொண்டு வந்திருந்தார் வாசன். பின்னர் இடைவேளை சமயத்தில் ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டதால் திரையரங்கில் இருந்து பாதியிலேயே வாசன் கிளம்பி சென்றார்.

Also Read | அமெரிக்காவில் வசூலை குவிக்கும் 'துணிவு'.. பிரீமியர் ஷோ-ல மட்டும் இத்தனை கோடி வசூலா! OFFICIAL

வாரிசு படத்தின் FDFS.. தியேட்டரில் VIBE ஆன TTF வாசன்.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

TTF Vasan watched Vijay Starring Varisu Movie FDFS

People looking for online information on TTF Vasan, TTF Vasan watched Varisu Movie FDFS, Varisu, Varisu FDFS will find this news story useful.