சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பலரும் பிரபலம் ஆகி வருகிறார்கள். காரணம் அவர்களுக்கு 2K கிட்ஸ் பலரும் ரசிகர்களாக இருப்பதுதான்.

Also Read | OTT-யில் வெளியாகும் நானி - நஸ்ரியா நடித்த சூப்பர் ஹிட்டான 'அடடே சுந்தரா' திரைப்படம்.. எப்போ? எதுல?
சில நாட்களுக்கு முன், பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎஃப் வாசனுக்கு குவிந்த கூட்டத்தை கண்டு 90ஸ் கிட்ஸ்கள் ஆச்சரியப் பட்டு போயினர். ஆனால் இதே அலை இன்னொருவருக்கும் இருக்கிறது, அவர்தான் 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழும் அமலா ஷாஜி.
ஆம், இவர் சோசியல் மீடியாவில் நடிகைகளுக்கு கூட இல்லாத அளவுக்கு அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார், அனைவருக்கும் இவருடைய கியூட்னஸ், ரியாக்ஷன் பிடித்து போனது. டிக் டாக் மூலம் மத்தியில் பிரபலமான அமலா ஷாஜி டிக் டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட, தற்போது இவரை மில்லியன் கணக்கானோர் பாலோ செய்கின்றனர்.
இவர் தம்முடைய சகோதரியுடன் சேர்ந்து ரீல்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், கடை விளம்பரங்கள் என சகல வீடியோக்களையும் வெளியிடுகிறார். குறிப்பாக இதென்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பது போல், அமலா ஷாஜியின் பிரபல வசனமான ‘அழுக ஒன்னும் வேணாம் ஓகே’ என்பதுதான் இவருடைய ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.
கேரளாவை சேர்ந்த இவருக்கு, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் உள்ளனர். ஆம், இவருக்கு தமிழ் ரசிகர்களும் எக்கச்சக்கம் தான். 20 வயதே ஆன அமலா ஷாஜிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள் என்றால் அதற்கு அமலா ஷாஜியின் க்யூட்டான வீடியோக்கள் தான் காரணம் என்கின்றனர் அவரை இன்ஸ்டாவில் பின் தொடரும் ரசிகர்கள்.
Also Read | "நீங்க wife-னா உள்ள போனது?".. பாக்யா அதிர்ச்சி.. கோபி சோலி முடிஞ்ச்!.. ரசிகர்களுக்கு பதில்.!