என்னது.? TTF வாசனுக்கு கல்யாணமா? மாலையும் கழுத்துமாக அவரே வெளியிட்ட விளக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய 2K Kids2 இளைஞர்களால் நன்கு அறியப்படுபவர் டிடிஎஃப் வாசன். பைக் டிராவல் செய்து வீடியோ போடும் எத்தனையோ யூடியூப் சேனல்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான்  டிடிஎஃப் வாசனின்  பிரபலமான யூடியூப் சேனல்.

Advertising
>
Advertising

உள்ளூர் வெளியூர் என பல நகரங்களுக்கு பைக்கில் பயணித்து, அதற்கான வீடியோவை சில குறிப்பிட்ட தகவல்களுடன் பகிரும் டிடிஎஃப் வாசன் பைக் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானவராக உருவெடுத்திருக்கிறார். இவரை பின்தொடர்பவர்கள் மட்டுமல்லாமல், அநேகமான மக்களுக்கும் தெரிய வந்தது சமீபத்தில் தான் .. ஆம், அண்மையில் டிடிஎஃப் வாசன் தம்முடைய ரசிகர்களை சந்தித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரல் ஆகின.

அந்த சமயத்தில் டிடிஎஃப் வாசன் ஒரு வீடியோவை பதிவிட்டு பேசியிருந்தர்.  அதில் டிடிஎஃப் வாசன், தம்முடைய விலை உயர்ந்த ஹெல்மட்டை அந்த கூட்டத்தில் தொலைத்து விட்டதாகவும், எனினும் அது தம்முடைய தவறுதான் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.  மேலும் அதில், “நான் நிச்சயமாக யாரோ திருடிவிட்டார்கள் என சொல்ல மாட்டேன்.. என்னுடைய நினைவாக எடுத்து வைத்திருக்கலாம்” என்று தம்முடைய ரசிகர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி ரசிகர்களின் பேரன்பை மீண்டும் பெற்றார் டிடிஎஃப் வாசன்.

இந்த நிலையில் தான் தற்போது டிடிஎஃப் வாசன் தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மாலையும் கழுத்துமாக இருக்கிறார்.  இது தொடர்பாக மீண்டும் விளக்கத்துடன் ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கிறார் டிடிஎஃப் வாசன்.

அந்த விளக்கத்தில், “நான் அண்ணி என்றெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தேன்.. அதனால் மாலையும் கழுத்துமாக இந்த வீடியோவில் என்னை பார்த்துவிட்டு யாரும் குழம்ப வேண்டாம். அதற்காக தான் இந்த விளக்கம். நான் திருமணம் செய்வதென்றால் நிச்சயமாக 24, 25 வயதாகிவிடும். இப்போது எனக்கு வயது 22 தான் ஆகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், “வேற மாநில பெண்களை பிடித்திருக்கிறது என்று சொல்வதெல்லாம் விளையாட்டு தான்..  உண்மையில் எனக்கு என் மாமா பெண்ணை பிடிக்கும், ஆனால் திருமண பேச்சுகள் அமைந்தால் நிச்சயமாக உங்களுக்கு தெரியப்படுத்துவேன். இந்த மாலை விஷயம் என்னவென்றால், நம் டிடிஎஃப் ஐம்பது பேர் நான் எங்கு இருக்கிறேன் என்று என்னை கண்டுபிடித்து வந்து செலிப்ரேட் செய்து கொண்டிருக்கின்றனர். அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ttf vasan explains up about his marriage after viral video

People looking for online information on TTF Vasan, Ttf vasan marriage, Ttf vasan opens up about his marriage will find this news story useful.