விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்நிலையில் இந்த சீரியலில் இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை நட்சத்திரா நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. இதுகுறித்து நட்சத்திராவிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கே காலையில் இருந்துதான் இந்த விஷயம் தெரியும். இது உண்மை இல்லை. வெறும் புரளி மட்டுமே!” என அவர் கூறினார்.
காரணம் பாரதி - கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ரோஷினி ஹரிபிரியன் இத்தொடரில் இருந்து விலகப்போவது மாதிரியான செய்திகளும் அவ்வபோது பரவி வருவதுதான். ஆனால் இதுகுறித்து ரோஷினி ஹரிபிரியன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் வளரும் ஹேமா என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிஷா, ஏற்கனவே யாரடி நீ மோகினி சீரியலில் நட்சத்திராவுடன் இணைந்து நடித்தவர். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோக்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் ஒருவேளை நட்சத்திரா கண்ணம்மா சீரியலில் நடிக்க இருக்கிறாரோ என்ற வதந்தி பரவி வந்த நிலையில், நட்சத்திரா தற்போது அப்படி எல்லாம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.