மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் பிற மொழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. இன்னமும் அவர் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தினை பார்த்தவர்கள் கண் கலங்கி "இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா போய்விட்டாரே' என்று வேதனையுடன் கூறுவதைப் பார்க்க முடிந்தது. சித்ராவுக்கு பொதுவாகவே ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் சித்ராவுக்கு தனது ஆங்கரிங் தொழில் எவ்வளவு பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே அதை குறிக்கும் மைக்கை தனது கையில் பச்சை குத்தி இருந்தார். இந்நிலையில் அவரது தீவிர ரசிகை ஒருவர் தற்பொழுது சித்ராவை போலவே தனது கையில் பச்சை குத்தி சித்து என்று எழுதியுள்ளார். மறைந்த பிறகும் சித்ராவுக்கு இருக்கும் தீவிரமான ரசிகர்கள்களை பார்த்து பலரும் வியப்படைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வைரலாகி வருகிறது.