சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம்! புகைப்படங்களுடன் வெளியான OFFICIAL UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising


தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம், மகேஷ்பாபு நடிப்பில்  `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குகிறார்.

`சர்காரு வாரி பாட்டா'

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை அடுத்தாண்டு (2022) பொங்கல் மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் இதே பொங்கல் 2022 அன்று ராதே ஷ்யாம், RRR, வலிமை போன்ற பெரிய படங்கள் வெளியாவதால் படத்தின் வெளியீடு ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

SSMB28!

பூஜா ஹெக்டே கோலிவுட்டில் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் திலீப்குமாரின் பீஸ்டில் நடித்து வருகிறார், தெலுங்கில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸூடன் நடித்துள்ளார்.  பூஜா அடுத்ததாக சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், ஹாரிகா மற்றும் ஹாசின் கிரியேஷன்ஸின் எஸ் ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) தயாரிக்கின்றனர். தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் கலை இயக்குநராக இருக்கும் போது ஆர்.மதி கேமராவைக் கையாளப் போகிறார். ஜெர்சி படத்திற்காக தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக உள்ளார்.

புதிய அப்டேட்!

படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட மகேஷ் பாபு விடுமுறையில் இருக்கிறார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் துபாயில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார். இச்சூழலில், திரிவிக்ரம், நாக வம்சி மற்றும் இசையமைப்பாளர் எஸ் தமன், மகேஷ் பாபுவை சந்திக்க துபாய் வரை சென்றுள்ளனர். முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதை இந்த அப்டேட் உறுதி செய்துள்ளது.

மகேஷ் பாபுவின் 28வது படமாக இந்த படம் உருவாகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் கீழே உள்ளது.
நடிப்பு: மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே

தொழில்நுட்ப குழு:

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

தயாரிப்பாளர் - எஸ் ராதாகிருஷ்ணா

பேனர்: ஹாரிகா மற்றும் ஹாசின் கிரியேஷன்ஸ்

இசை - எஸ்எஸ் தமன்

எடிட்டர் - நவீன் நூலி

ஓளிப்பதிவு - ஆர் மதி

கலை - ஏஎஸ் பிரகாஷ்

Trivikram, Naga Vamsi, S Thaman Meet Mahesh Babu In Dubai

People looking for online information on சர்காரு வாரி பாட்டா, பூஜா ஹெக்டே, மகேஷ்பாபு, Naga Vamsi, S Thaman, Superstar Mahesh Babu, Trivikram Srinivas will find this news story useful.