VIDEO: அடுத்தடுத்து இரண்டு ஷோ.. பிரபல தயாரிப்பாளருடன் துணிவு & வாரிசு FDFS பார்த்த நடிகை த்ரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் இன்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஆக்சன் & திரைக்கதை".. துணிவு FDFS பார்த்த நடிகர் அருண் விஜய் வைரல் ட்வீட்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதே போல் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் அதிகாலை 1 மணி முதல் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா, பிரபல மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் 1 மணிக்கு துணிவு படத்தையும், 4 மணிக்கு வாரிசு படத்தையும் பார்த்துள்ளார். த்ரிஷாவுடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் உடன் படம் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | "பிளாக்பஸ்டர் ஹிட்.. ஒவ்வொரு சீனும்".. 'துணிவு' பார்த்த பிறகு பிரபல இயக்குனரின் செம்ம ட்வீட்!

VIDEO: அடுத்தடுத்து இரண்டு ஷோ.. பிரபல தயாரிப்பாளருடன் துணிவு & வாரிசு FDFS பார்த்த நடிகை த்ரிஷா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Trisha watching Thunivu Varisu FDFS at Maduravoyal AGS cinemas

People looking for online information on Maduravoyal AGS cinemas, Thunivu FDFS, Trisha Krishnan, Trisha watching Thunivu Varisu FDFS, Varisu, Varisu FDFS, Vijay will find this news story useful.