கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | PS1: "தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறோம்.. அப்படி என்ன நாம பெரியாள்னா தெரியாது!" - கார்த்தி பேச்சு!
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப்பேரரசின் பொற்காலம் துவங்கும் காலக்கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முரசு கொட்ட, மேடைக்கு வருகை தந்த நடிகை திரிஷா பேசும்போது, “நான் மணி சாரின் குந்தவை. அது எனக்கு போதும். ஒரு புது முகமாக இருக்கட்டும், ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கட்டும். மணிரத்னம் சாரின் படத்தில் பணிபுரிவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். அவருடைய மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பில் நான் இருக்கிறேன் என்பதே மிக பெருமிதமாக இருக்கிறது. நன்றி மணி சார்.
பொன்னியின் செல்வன் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டிய படம். சோழர்கள் இந்தியா முழுவதும் சென்றார்கள், அதேபோல இந்த படத்தை இந்தியா முழுவதும் நாம் கொண்டு செல்ல போகிறோம். ரோஜா திரைப்படம் மூலமாக 90-களில் மணி சார் பான் இந்திய திரைப்படங்களை உருவாக்க தொடங்கினார். அவர் அதில் முன்னோடி என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது இந்தியாவில் பார்த்தால் பான் இந்தியா சினிமா என்பது அதிகமாகின்றது. அதிலும் தென்னிந்திய சினிமாக்களை அனைவரும் அதிகமாக ரசித்து பார்க்கிறார்கள். சொல்லப்போனால் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களை அவர்களுக்கு நாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். லவ் ஸ்டோரி, டிராமா, ஆக்சன் உள்ளிட்ட பல.... பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியா முழுவதும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தியாவின் மிக நேர்த்தியான ஒரு திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் படுகிறோம்! நன்றி” என பேசினார்.
Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் இணையும் 'பத்து தல' - வெளியானது அடுத்த அப்டேட்!