தமிழில் முன்னணி இளம் ஹீரோவாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் தம்முடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா திரைப்பட இயக்குனரின் அடுத்த திரைப்படமான மாவீரன் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதேபோல் மண்டேலா திரைப்படத்தின் நாயகனான நடிகர் யோகி பாபு காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவருக்கு கோயில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்து தரப்பட்டது.
இதனிடையே நடிகை திரிஷா காஷ்மீரில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் லியோ படபிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். அங்கு சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயிலில் சென்று லிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட அவை வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்த திரிஷா, சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்யக்கூடிய இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.