14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா.. தளபதி 67 படக்குழு வெளியிட்ட தெறி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | பச்சை குத்திக் கொண்ட நடிகை சதா.. வீகன் டாட்டூவா..? வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

நேற்று முன்தினம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய் - த்ரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது குருவி படத்திற்கு பிறகு 14 வருடங்கள் கழித்து இந்த ஜோடி தளபதி 67 படத்தின் மூலம் இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை பிரத்யேக மாஸ்அப் வீடியோ மூலம் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | குழந்தை பிறப்புக்கு அட்லி & பிரியாவை வாழ்த்திய கீர்த்தி & சமந்தா.. என்ன சொல்லிருக்காங்க 😍

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Krishnan on board for Thalapathy 67 Movie

People looking for online information on Thalapathy 67 Movie, Trisha Krishnan will find this news story useful.