போடு! மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் இணைந்த த்ரிஷா.? தெறிக்கவிடும் அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் உள்ளது.

Advertising
>
Advertising

சாமி, கில்லி, கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

அதே போல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் வெளியாகி இருந்தது.

கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். பிளாக்பாஸ்டர் படமாக மாறி இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக ராங்கி திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. H. வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 என இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளது பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில், அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.


ஏற்கனவே விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அஜித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்திலும் த்ரிஷா நாயகியாக இணைந்துள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha in Ajith next Vignesh Shivan movie deets

People looking for online information on Ajith Kumar, AK 62, Trisha, Vignesh shivan will find this news story useful.