PONNIYIN SELVAN ரிலீஸ் தேதி நம்ம ‘குந்தவை’ த்ரிஷாவுக்கு ரொம்ப ஸ்பெஷல்.. கொண்டாடும் ரசிகர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் தொகுப்பை அடிப்படையாக கொண்டு, பிரபல இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார்.

Trisha crown miss chennai on same date of ponniyin selvan release
Advertising
>
Advertising

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", இன்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், லால், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆன செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும், இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷாவுக்கும் ஸ்பெஷலான விஷயம் ஒன்று உள்ளது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. சினிமாவில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தான் அவர் விளங்கி வருகிறார். கில்லி, அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட ஏரளமான திரைப்படங்களில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் தாக்கம், நீண்ட நாளாக நிலைத்து நின்று வருகிறது.

மேலும், பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரம் கூட அவரது நடிப்பு பயணத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்றும் ஏராளமானோர் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதனிடையே, செப்டம்பர் 30 ஆம் தேதி த்ரிஷாவுக்கு எந்த அளவு ஸ்பெஷல் என்பது பற்றிய செய்தி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

தான் நடிக்க வருவதற்கு முன்பு மாடலாக இருந்த த்ரிஷா, "மிஸ் சென்னை" பட்டம் வாங்கியதன் மூலம் நன்கு அறியப்பட்டிருந்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதியான இதே நாளில் தான் மிஸ் சென்னை பட்டத்தை அவர் பெற்றிருந்தார். அதே தேதியில் தற்போது தமிழ் சினிமாவின் கனவு திரைப்படம் என குறிப்பிடப்படும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகமும் ரிலீஸ் ஆகி உள்ளது.

அதில் த்ரிஷாவும் நடித்துள்ளதால், அதற்கும் மிஸ் சென்னை பட்டம் வென்ற தினம் என இரண்டுக்கும் சேர்த்து நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha crown miss chennai on same date of ponniyin selvan release

People looking for online information on Kundhavai, Mani Ratnam, Miss Chennai, Ponniyin Selvan 1, Trisha will find this news story useful.