தளபதி 67 படத்தின் ஷூட்டிங்.. தனி விமானத்தில் பிரபல நடிகையுடன் பயணமாகும் த்ரிஷா? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | BOX OFFICE: ஐந்தே நாளில் இம்புட்டு கோடி வசூலா?.. பல சாதனைகளை படைத்த 'பதான்'.. வெறித்தனமான வசூல் வேட்டை!

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக படக்குழுவினர் தனி சிறப்பு விமானத்தில் படப்பிடிப்புக்கு பயணம் செய்கின்றனர்.  இந்த பயணத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டு காஷ்மீர் செல்ல உளளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகை த்ரிஷாவுடன் பிரபல நடிகை பிரியா ஆனந்தும் இந்த சிறப்பு தனி விமானத்தில் பயணம் செய்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | தனி விமானத்தில் தளபதி 67 படக்குழு.. அப்போ ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Trisha boarded the Thalapathy 67 charted flight Sources

People looking for online information on Thalapathy 67, Thalapathy 67 Movie Updates, Trisha Krishnan will find this news story useful.