VIDEO: "என் பூர்வீகம் கேரளா.. அதான் VTV ஜெஸ்ஸி".. மனம் திறந்த நடிகை த்ரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை த்ரிஷா.

சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

"பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும்  500+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழில் நடிகை த்ரிஷா, 'தி ரோடு' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

மேலும் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் சீரிஸ் ஒன்றில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த வெப் சீரிஸில் தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரியாக த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. சூர்யா வங்கலா இந்த சீரிஸை இயக்க, தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

த்ரிஷா நடிப்பில் ராங்கி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை த்ரிஷா அளித்துள்ளார். அதில், 96 படத்தின் ஜானு & VTV படத்தின் ஜெஸ்ஸி கேரக்டர்கள் குறித்து த்ரிஷாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த த்ரிஷா, "சில சமயம் விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு மலையாள படம் போல் எனக்கு தோன்றும்.  ரசிகர்கள் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை தங்களுடன் பொறுத்தி பார்த்தது அதற்கு காரணம். நான் கேரளாவில் இருந்து சென்றவள்.  என்னுடைய பூர்வீக வேர்கள் கொஞ்சம் கேரளாவில் உண்டு. ஜெஸ்ஸி கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் என்னுடைய கேரக்டருக்கு நெருக்கத்தில் வரக்கூடியது. ஜெஸ்ஸிக்கு இருக்கும் குழப்பமான மனநிலை எனக்கும் உண்டு." என த்ரிஷா பதில் அளித்தார்.

VIDEO: "என் பூர்வீகம் கேரளா.. அதான் VTV ஜெஸ்ஸி".. மனம் திறந்த நடிகை த்ரிஷா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Trisha about Her Roots in Kerala Jessy Vinnai Thaandi Varuvaya

People looking for online information on Jessy, Kerala, Raangi, Trisha, VTV will find this news story useful.