VIDEO: சிவமணி & ராஜேஷ் வைத்யா.. களைகட்டிய கச்சேரி.. ஒன்றாக ரசித்த AR அமீன் & அபிஷேக் பச்சன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை ஒட்டி நடந்த இசை நிகழ்வில் தமிழக பிரபல இந்திய டிரம்ஸ் இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீ போர்டு பிளேயர் கார்த்திக் தேவராஜ், கிதாரிஸ்ட் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | Avatar: 4K-ல அதுவும் 3D-ல HDR தரத்தில் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 'அவதார்' முதல் பாகம்.. எப்போ..?

விஜய் விடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வாசித்து புகழ்பெற்ற கார்த்திக் தேவராஜ் மற்றும் மணி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது பலரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் தொடர்ச்சியான தனியிசை கலைஞராகவும் வியப்பூட்டும் வீணை வாசிப்பாளராகவும் திகழும் வீணைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர்களுடன் டிரம்ஸ் சிவமணி இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.

டிரம்ஸ் சிவமணி, அண்மையில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல்களுக்காக வாசித்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ச்சியாக பல ஆண்டுகாலம் முன்னணி இசைக் கலைஞர்கள் இசையமைத்த முன்னணி பாடல்களுக்கும், தனியிசைகளுக்கும் வாசித்த டிரம்ஸ் சிவமணி அண்மையில் நடந்த சென்னை ஒலிம்பியாட் நிகழ்விலும் வாசித்தார்.

இந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் ஹீரோ அபிஷேக் பச்சன் கலந்துகொண்டார். அவருடன் அவரது அருகில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அமர்ந்திருந்தார். அமீனும் அபிஷேக் பச்சனும் அருகருகில் அமர்ந்தபடி இசைக்கச்சேரியை கவனித்துக்கொண்டிருந்துள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பார்த்திபன் தமிழில் இயக்கி நடித்து தேசிய விருதுபெற்ற ஒத்த செருப்பு திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மைக் விருது நிகழ்வில் தன் மகன் அமீனுடன் கலந்துகொண்ட  ஏ.ஆர்.ரஹ்மான்,  தங்கள் காலத்தை போல களத்தில் சென்று இசையமைக்கவும், புதிய நபர்களை சந்தித்து இசையாடவும் அவருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும், எங்கேனும் சென்றால் அவற்றை படம் பிடித்து இணையத்தில் பதிவிடும் வாய்ப்புகளே சூழலாக இருப்பதாகவும், அதுவே அவர் பொதுவெளியில் அதிகம் தோன்றாமைக்கு காரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இரவின் நிழல் நிகழ்வுக்காக இசைக்கலைஞர்கள் சங்கமித்த இந்த நிகழ்வில் அமீன் கலந்துகொண்டு இசைக்கச்சேரியை ரசித்து பார்த்துள்ளார். நிகழ்ச்சியின் முழு வீடியோ இணைப்பில் உள்ளது.

Also Read | விரைவில் வெள்ளித்திரையில் ராஜா ராணி 2 சீரியல் ஹீரோ..! வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்.!

VIDEO: சிவமணி & ராஜேஷ் வைத்யா.. களைகட்டிய கச்சேரி.. ஒன்றாக ரசித்த AR அமீன் & அபிஷேக் பச்சன்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tribute to AR Rahman AR Ameen Abhishek Bachchan

People looking for online information on AR Rahman, Drums sivamani, Rajesh vaidhya, Tribute to AR Rahman will find this news story useful.