‘வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ - பாடிய அனிருத் .. பார்த்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை ஒட்டி நடந்த இசை நிகழ்வில் தமிழக பிரபல இந்திய டிரம்ஸ் இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீ போர்டு பிளேயர் கார்த்திக் தேவராஜ், கிதாரிஸ்ட் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | Avatar: 4K-ல அதுவும் 3D-ல HDR தரத்தில் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 'அவதார்' முதல் பாகம்.. எப்போ..?

விஜய் விடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வாசித்து புகழ்பெற்ற கார்த்திக் தேவராஜ் மற்றும் மணி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது பலரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் தொடர்ச்சியான தனியிசை கலைஞராகவும் வியப்பூட்டும் வீணை வாசிப்பாளராகவும் திகழும் வீணைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர்களுடன் டிரம்ஸ் சிவமணி இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.

டிரம்ஸ் சிவமணி, அண்மையில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல்களுக்காக வாசித்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ச்சியாக பல ஆண்டுகாலம் முன்னணி இசைக் கலைஞர்கள் இசையமைத்த முன்னணி பாடல்களுக்கும், தனியிசைகளுக்கும் வாசித்த டிரம்ஸ் சிவமணி அண்மையில் நடந்த சென்னை ஒலிம்பியாட் நிகழ்விலும் வாசித்தார்.

இந்த நிகழ்வில் சர்ப்ரைஸாக இசையமைப்பாளர் அனிருத்,  “வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே” எனும் ரஹ்மானின் பாடலை பாடி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமர்ப்பித்தார். இணைய வழி மூலம் திரையில் தோன்றிய இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கீ போர்டு வாசித்துக்கொண்டே, இந்த பாடலை பாடியுள்ளார். வீடியோ வழியில் கீ போர்டு வாசித்தபடி அனிருத் பாடிய இந்த பாடலை அரங்கத்தில் இருந்தபடி ஏ.ஆர்.ரஹ்மானும் ரசித்து பார்த்தார்.

இசையுலகில் தனக்கு சீனியரான, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தம் அன்பின் நெகிழ்ச்சியையும் மரியாதையயும் சமர்ப்பிக்கும் வகையில் அனிருத் பாடிய இந்த பாடல் அந்த அரங்கத்தை மட்டுமல்லாது ரசிகர்களையும் நெகிழவைத்துள்ளது.

Also Read | Video: சிவமணி & ராஜேஷ் வைத்யா.. களைகட்டிய கச்சேரி.. ஒன்றாக ரசித்த AR அமீன் & அபிஷேக் பச்சன்.!

‘வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ - பாடிய அனிருத் .. பார்த்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Tribute to AR Rahman Anirudh Plays and Sings AR Rahman Song

People looking for online information on AR Rahman, Drums sivamani, Rajesh vaidhya, Tribute to AR Rahman will find this news story useful.