கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ. 26 வயது ஆகும் இவர், மாடல் மற்றும் நடிகையாக இருந்து வந்துள்ளார்.
Also Read | போடு வெடிய..கார்த்தி நடிக்கும் விருமன்.. ரிலீஸ் எப்போ? வெளிவந்த OFFICIAL தகவல்!
மேலும், கொச்சியின் சக்கரபரம்பு என்னும் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் வசித்து வந்துள்ளார் ஷெரின்.
இந்நிலையில், தான் தங்கி வந்த வீட்டில், அங்கிருந்த மின் விசிறியில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை அவரது ரூம் மேட்கள் உறுதி செய்துள்ளனர்.
சொந்த பிரச்சனைகள் தான் காரணம்?
ஷெரின் மரணம் குறித்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அவரது மொபைல் போன் On செய்தபடி இருந்ததாகவும், யாரோ ஒருவருடன் வீடியோ காலில் இருந்த போது, இப்படி ஒரு முடிவை ஷெரின் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஷெரின் மரணம் தொடர்பாக கிடைத்த தகவலின் படி, கடந்த சில தினங்களாக, சொந்த பிரச்சனைகள் காரணமாக அதிக மன அழுத்தத்திலும் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நடிகை சஹானாவின் முடிவு?
ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரின், கடந்த சில ஆண்டுகளாக, சக்கரபரம்பு பகுதியில் வசித்து வந்தார். இது தொடர்பாக, தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாடல் மற்றும் நடிகையான சஹானாவும் தன்னுடைய வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஒரு வாரத்திற்குள் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளம் நடிகைகள், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8