“VTK ஆடியோ ரிலீஸ தள்ளிவச்சிட்டு, எனக்காக… “ சிம்பு பத்தி பேசும்போது EMOTIONAL ஆன TR

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெளிநாடு செல்வதற்கு முன்பாக நடிகர், இயக்குனர் T ராஜேந்தர் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

Advertising
>
Advertising

Also Read | டி.இமான் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடல்..!

உடல்நல பிரச்சனை…

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் சில வாரங்களுக்கு முன்னதாக சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு பிரச்சனை உள்ளதால் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளதாக அவரது மகன் நடிகர் சிம்பு அறிவித்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

வெளிநாட்டு சிகிச்சை…

நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில்  சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் டி ராஜேந்தர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.

எமோஷனல் ஆன TR…

இதையடுத்து நேற்று நடிகர் T ராஜேந்தர் அமெரிக்காவுக்கு சென்றார். செல்வதற்கு முன்பாக அவர் விமான நிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர் “என் மகன் சிம்பு எனக்கு மேல் சிகிச்சை அளிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றதால்தான் நான் இப்போது வெளிநாடு செல்கிறேன். எனக்காக தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸை தள்ளிவைத்துவிட்டு, பத்துதல படத்தின் ஷூட்டிங்கைத் தள்ளிவைத்து விட்டு கடந்த 12 நாட்களாக அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவரை பிள்ளையாக பெற்றதில் பெருமைப்படுகிறேன்” எனப் பேசிக்கொண்டு இருக்கும்போதே கண்கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர் “சிகிச்சை முடிந்துவந்ததும் உங்களோடு பேசி, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” எனக் கூறி புறப்பட்டார்.

Also Read | ‘Queen 2’ ஷூட்டிங்கில் ரம்யா கிருஷ்ணனோடு பிரபல நடிகை… வைரலாகும் BTS pics

தொடர்புடைய இணைப்புகள்

TR got emotional when speaking about Simbu

People looking for online information on Silambarasan, Simbu, Str, T Rajendar, TR, TR Emotional speech will find this news story useful.