நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் திரைப்படக் கலைஞர்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

Also Read | வேற லெவல் Update … பகத் ஃபாசில் கதபாத்திரம்... சீக்ரெட் உடைத்த ‘விக்ரம்’ படக்குழு – வைரல் Poster
பூச்சி முருகன் கோரிக்கை…
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கலைத்துறையினர் மீது காட்டும் ஆதரவுக்கும் அக்கறைக்கும் வலு சேர்க்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்து 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் கட்டண சலுகையை மீண்டும் தொடர ஆவன செய்ய கோரிக்கை கடிதம் வழங்கினார். அந்த கோரிக்கையை ஏற்று .டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
T R பாலு கடிதம்…
இது சம்மந்தமாக திமுக மக்களவை உறுப்பினர்கள் தலைவரான T R பாலு மத்திய ரயில்வே அமைச்சரான ’அஸ்வினி வைஷ்ணவ் ஜி’ அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது. கோவிட் 19 பெருந்தொற்று காலத்தின் போது ரயில்வேத் துறையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டதில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெற்று வந்த கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டன.
இப்போது எல்லா சேவைகளும் புணரமைக்கப்பட்ட நிலையில், மிகவும் வறிய நிலையில் இருக்கும் பெருந்தொற்று காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் பயணத்துக்காக முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டிய சூழலில் உள்ளனர். அவர்களின் சொற்ப வருமானத்தில் இது மிகவும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. மீண்டும் பழைய கட்டண சலுகைகளை அமல்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read | “அப்போ shock-ஆ இருந்துச்சு… இப்போ ஹேப்பி”… ‘தி லெஜண்ட்’ ஆடியோ விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ்