சந்தோஷ் நாராயணன், "விக்ரம்" DOP, அப்பறம் இந்த நடிகை! டொவினோ தாமஸ் படத்தின் வேற மாரி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டோவினோ தாமஸ் நடிப்பில் ‘அன்வேஷிப்பின் கண்டெட்டும்’ படத்தின் மூலம் ஒரு புதிய கதாநாயகி மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். 

Tovino Thomas 'Anveshippin Kandettum' movie new heroine

இந்த படத்தை டார்வின் குரியகோஸ் இயக்க உள்ளார். தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரபல இயக்குனர் ஜினு வி ஆபிரகாம் திரைக்கதை எழுதியுள்ளார். 'விக்ரம்' படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் பிருத்விராஜின் 'காபா' படத்தையும் தயாரிக்கிறது. 

Tovino Thomas 'Anveshippin Kandettum' movie new heroine

இந்தப் படத்தில் நெடுமுடி வேணு, ஜாபர் இடுக்கி, நந்து, விஜயகுமார் மற்றும் சைஜு குருப் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் புலனாய்வாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

பிரபல தமிழ் இசை இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இந்த 'அன்வேஷிப்பின் கண்டெட்டும்' படத்தின் மூலம் மலையாளத்திற்கு செல்கிறார். எடிட்டிங் - சைஜு ஸ்ரீதர். கலை இயக்கம் - மோ ஹாண்டாஸ், ஆடை வடிவமைப்பாளர் - சமீரா சனீஷ், ஒப்பனை - சஜி கட்டகடா, ஸ்டில்ஸ் - இப்சன் மேத்யூஸ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் இந்த ‘அன்வேஷிப்பின் கண்டெட்டும்’ படத்தின் கதாநாயகியாக தான் நடிப்பதாக காயம்குளத்தைச் சேர்ந்த ஆத்ய பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இவர் பிரபல மாடல் ஆவார். ஆத்ய பிரசாத் முன்னதாக, குஞ்சாக்கோ போபனின் 'நிழல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நிழலில் அவரது நடிப்பைப் பார்த்த பிறகு இயக்குனர் டார்வின் குரியகோஸ் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு அளித்துள்ளார்.

.'முத்துமணி' எனும் கதாபாத்திரத்தில் ஆத்ய பிரசாத் நடிக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tovino Thomas 'Anveshippin Kandettum' movie new heroine

People looking for online information on Tovino, Tovino Thomas will find this news story useful.