இந்த ஜோடி செமயா இருக்கே.. மின்னல் முரளி டோவினோவுடன் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'மின்னல் முரளி'. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், நேரடியாக இந்த திரைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

குஞ்சு ராமாயணம், கோதா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பாசில் ஜோசப், மின்னல் முரளி திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், இந்திய அளவில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜீவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. இது வடிவேலுவோட ஹிட் வசனம் ஆச்சே.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

சிறந்த சூப்பர் ஹீரோ

அது மட்டுமில்லாமல், தென் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி என்றும் பலர் பாராட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக, நாரதன் என்னும் திரைப்படம், ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதன் பின்னர் தள்ளுமால, வாஷி, அஜயண்ட ரெண்டாம் மோஷனம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

முதல் முறையாக ஜோடி

இதில் 'வாஷி' என்னும் திரைப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்கி வருகிறார். இதில், டோவினோவிற்கு ஜோடியாக, பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு, கடந்த நவம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமானது.

வெளியான புகைப்படம்



இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில், டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், டோவினோ மற்றும் கீர்த்தி ஆகியோர் கருப்பு வெள்ளை உடை அணிந்து காணப்படுகின்றனர். இதனால், அவர்கள் 'வாசி' திரைப்படத்தில் வக்கீலாக நடித்து வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

சிம்பு லுக் அல்லுது! வைரலாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் BTS புகைப்படங்கள்!

கீர்த்தி சுரேஷ்

'மகாநதி' திரைப்படம் மூலம், தனக்கென ஒரு  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம், அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் 'மரைக்காயர்' திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக, உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திலும், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Tovino thomas and keerthy suresh starring vaashi still viral

People looking for online information on கீர்த்தி சுரேஷ், மின்னல் முரளி டோவினோ, Keerthy Suresh, Tovino Thomas, Vaashi will find this news story useful.