ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற நடிகர்கள், தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் சிலர் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த கதாபாத்திரமானாலும் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களை தான் இந்த லிஸ்டில் நாம் பார்க்க போகிறோம்.
நமது லிஸ்டில் முதலில் இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் பல படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் வில்லனாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் அமோகமாக வெற்றி பெற்றது. ஹீரோவாக நடித்து புகழ் பெற்றதை விட, தன்னால் வில்லனாகவும் மிரட்ட முடியும் என்று அனைவர்க்கும் உணர்த்தினார்.
அடுத்து நம் லிஸ்டில் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா, இப்போது வரும் படங்களில் ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரம் நல்ல பெயரை எடுப்பதை உணர்ந்த நம் நடிகர்கள், நெகடிவ் ரோலை தயங்காமல் நடிக்கின்றனர். அந்த வகையில் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. இதன் மூலம் இயக்குனராகவும், ஹீரோவாகவும் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் சாதித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
வில்லனாக மிரட்டிய வினய்,ஒரு காலத்தில் பெண்களின் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக இருந்தார்.துப்பறிவாளன் படத்தில் வில்லன் ரோல் செட் ஆக, வில்லனாகவே மாறிவிட்டார் வினய். டாக்டர் படத்தில் இவரது கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். இதுபோல் பல முன்னணி நடிகர்கள், ஹீரோ என்ற அந்தஸ்தைவிட கிடைக்கும் ரோல் தான் முக்கியம் என்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.