LATEST: பொங்கலுக்கு மோத தயாராகும் மூன்று முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தை PSPKRana Movie என்றும் Production No 12 என்றும் அழைக்கின்றனர்.

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். நாகவம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல், மஹா சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி -12ல் ரிலிசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில் இந்த திரைப்படம் பொங்கல், மஹா சங்கராந்தியை முன்னிட்டு பிரபாஸின் 'ராதே ஷியாம்' மற்றும் மகேஷ் பாபுவின் ' சர்காரு வாரி பட்டா' படங்களுடன் நேரடியாக மோத உள்ளது.

350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் உருவாகி வரும் 'ராதே ஷியாம்' ஜனவரி 14, 2022 அன்று திரையரங்குகளில், மஹாசங்கராந்தி நாளில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேலும் மகேஷ்பாபு நடிப்பில் `சர்காரு வாரி பாட்டா' படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த 'சர்காரு வாரி பட்டா' படமும் மஹா சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 இதனால் மூன்று படங்களின் மொத்த வசூலும் கனிசமாக பாதிக்கப்படலாம். போதுமான திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் எழலாம். தெலுங்கு சினிமாவில் கோலோச்சும் மூன்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ஒரே விழாவை முன்னிட்டு வெளியாவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Top 3 heroes ready for pongal maha sankranthi clash

People looking for online information on Mahesh Babu, Pawan Kalyan, Prabhas will find this news story useful.