2021-ல் உலகின் மிகச்சிறந்த 25 படங்கள்... இடம் பிடித்த ஆறு இந்திய திரைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் ஆண்டு உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் ஆறு இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertising
>
Advertising

உலக அளவில் 2021 ஆம் ஆண்டு வெளியான அனைத்து படங்களில் இருந்தும் மிகச்சிறந்த 20 படங்களை பிரபல ஆங்கில இணையதளமான லெட்டர் பாக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 6 படங்கள் மட்டுமே இடம்பிடித்து உள்ளன. அதில் தமிழில் சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், கர்ணன் ஆகிய படங்களும், மலையாளத்தில் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன. "தி கிரேட் இந்தியன் கிச்சன்" (மலையாளம்) - 10 வது இடத்தையும், பகத் பாசில் நடித்த "ஜோஜி" (மலையாளம்) -18 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்தி படமாக விக்கி கவுசால் நடித்த சர்தார் உத்தம் சிங் (இந்தி) - 8 வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ் படங்களில் சார்பட்டா பரம்பரை 14 வது இடத்தையும், ஜெய் பீம் 15வது இடத்தையும், கர்ணன் 19வது இடத்தையும் பிடித்துள்ளது.  யுனி எனும் இந்தோனிசிய படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வணிக ரீதியிலும் படைப்பு ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ளார். 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களம்.

முதல் அரையாண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5 படங்கள் மட்டுமே இடம்பிடித்து உள்ளன. அதில் தமிழில் கர்ணனும், யோகிபாபு நடித்த மண்டேலாவும் அடக்கம். மலையாளத்தில் மூன்று படங்கள் இடம் பிடித்தன. "தி கிரேட் இந்தியன் கிச்சன்" (மலையாளம்) - 5 வது இடத்தையும், "கர்ணன்" 10வது இடத்தையும், பகத் பாசில் நடித்த "ஜோஜி" (மலையாளம்) -12 வது இடத்தையும், "மண்டேலா" 17 வது இடத்தையும், நயாத்து (மலையாளம்) - 23 வது இடத்தையும் பிடித்தன. முதல் இடத்தை பிலிப்பைன்ஸ் திரைப்படமான கிளினர்ஸ் பெற்றது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... "இப்போ ரெடி" கெத்தாக அறிவித்த த்ரிஷா!

கமல்ஹாசன் - ராஜீவ் மேனன் - தேவி ஸ்ரீ பிரசாத்!!! அடுத்த சம்பவமோ? என்னாவா இருக்கும்?...

தொடர்புடைய இணைப்புகள்

Top 20 best world movies list of the year 2021 letterbox

People looking for online information on 2021 letterbox, இந்திய திரைப்படங்கள், JaiBhim, Karnan, Sarpatta Parambarai, Top 20 best world movies will find this news story useful.