சூர்யாவை மீண்டும் இயக்கும் பிரபல இயக்குனர்.. BEHINDWOODS GOLD MEDALS 2022 விருது மேடையில் வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து நடைபெறவுள்ளது.

Advertising
>
Advertising

இதன் முதல் நாளான இன்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு பக்கம், நடன நிகழ்வுகளுக்கு மத்தியில், பல பிரபலங்கள் விருதினையும் வென்றிருந்தனர். லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, யோகி பாபு, ஞானவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.

விருதுகளை வென்ற ஜெய்பீம் திரைப்படம்

இதில், ஜெய்பீம் படத்திற்காக நடிகர் மணிகண்டன் மற்றும் நடிகை லிஜோமோள் ஜோஸ், இயக்குனர் ஞானவேல் ஆகியோர் விருதுகளை வென்றிருந்தனர். கடந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில், சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது ஜெய்பீம் திரைப்படம். இந்த படத்தை TJ ஞானவேல் இயக்கி இருந்தார். மணிகண்டன் மற்றும் லிஜோமோள் ஆகியோருடன் நடிகர் சூர்யாவும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

சூர்யா படத்தின் இயக்குனர்?

பல இடங்களில், ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைத்து வந்த நிலையில், தற்போது Behindwoods மேடையிலும் மணிகண்டன், லிஜோமோள் மற்றும் ஞானவேல் ஆகியோர் விருதினை வென்றுள்ளனர்.  இதனிடையே, நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவலை, 2D எண்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன், Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா

எதற்கும் துணிந்தவன் படத்தில் கடைசியாக நடித்திருந்த சூர்யா, அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா. இதனிடையே, ஜெய்பீம் படத்தை இயக்கி இருந்த TJ ஞானவேல் அடுத்து இயக்கவுள்ள படத்தில் மீண்டும் சூர்யா நடிக்கவுள்ளதாக Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் பலரும் இது தொடர்பான பதிவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

TJ Gnanavel to direct surya says rajasekar pandian in bgm awards

People looking for online information on Jai Bhim Tamil, Rajasekar Pandian, Suriya, T. J. Gnanavel will find this news story useful.