BREAKING: "டைட்டிலே செமயா இருக்கே?".. சந்தானத்தின் அடுத்த படம் இதுவா? யாரு டைரக்டர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய நடிகர் சந்தானம், இதனைத் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

title for Santhanam next movie directed by Prasanth Raj deets
Advertising
>
Advertising

அண்மையில் சந்தானம் நடிப்பில் ‘மேயாத மான்’, ‘ஆடை’ திரைப்படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய குளு குளு திரைப்படம் ரிலீஸ் ஆனது. டார்க் காமெடி ஜானரில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் வழக்கமான தன் பாணியில் இல்லாமல் நடித்திருந்தார்.

title for Santhanam next movie directed by Prasanth Raj deets

சந்தானம் என்றாலே கலாய்ப்பது, காமெடி கவுண்டர்களை பேசுவது உள்ளிட்ட எந்த விஷயங்களுமே இல்லாமல் சீரியஸான போக்கில் நடித்திருப்பார். கதையில் காமெடி இருந்தாலும் கூட, அவை எதையுமே சந்தானம் செய்ய மாட்டார். முன்னதாக சந்தானத்தின் நடிப்பில் ஏ1, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத்து, டிக்கிலோனா ஆகிய திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாக வெளியாகியிருந்தன.

இதேபோல், சந்தானத்தின் ஹிட் பேய் படங்களாக தில்லுக்கு துட்டு வரிசைத் திரைப்படங்கள் 2 பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சந்தானம் தமது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகி வருகிறார். அந்த வகையில் அவரது அடுத்த திரைப்படம் தொடர்பாக அப்டேட் தெரியவந்துள்ளது.

அதன்படி, நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்துக்கு KICK என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இந்த திரைப்படத்தை இயக்குவார் என்றும் இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதர விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரியவந்துள்ளன.

Tags : Santhanam

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Title for Santhanam next movie directed by Prasanth Raj deets

People looking for online information on Santhanam will find this news story useful.