டைட்டானிக், அவதார் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த திரைப்படம் குறித்து உலக சினிமா ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அகாடமி விருது பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பில் டிஸ்னி+ ல் பிரீமியராக வெளியாகியுள்ளது "சீக்ரெட்ஸ் ஆஃப் தி வேல்ஸ்" என்று அழைக்கப்படும் ஒரு தேசிய புவியியல் ஆவணத் திரைப்படம். orcas, humpbacks, belugas, narwhals & sperm whales என 5 வித்தியாசமான திமிங்கல இனங்களைப் பற்றிய இந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் 24 வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நமது பெருங்கடல்கள், நமது கிரகம் மற்றும் அழகான உயிரினங்களுக்கு ஒரு காதல் கடிதம் என்று இந்த ஆவணப் பட உருவாக்கத்தை இப்படக்குழு வரையறுத்துள்ளது. இதுபற்றி பேசிய விருது பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பிரையன் ஸ்கெர்ரி, “இது எனது தொழில் வாழ்க்கையின் மிகவும் லட்சியமான திட்டம். நான் 23 ஆண்டுகளாக நேஷனல் ஜியோகிராஃபிக் உடன் இருந்தேன், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக உலகப் பெருங்கடல்களை ஆராய்ச்சி செய்து வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடல் நீருக்கடியில் வாழும் திமிங்கலங்களின் கலாச்சாரம், அவர்களின் மூதாதையர் மரபுகள், அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், ஆளுமை, மகிழ்ச்சி மற்றும் துக்கம் மற்றும் விளையாட்டு என பல வழிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் புவியியல் எங்கு மாறுகிறது, அதே போல் எங்கு திமிங்கல கலாச்சாரமும் மாறுகிறது என்பதையும் ஸ்கெர்ரி கண்டறிந்துள்ளார்.
நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனத்தின் "தி சீக்ரெட்ஸ் ஆஃப் தி வேல்ஸ்" ஏப்ரல் 22 வியாழக்கிழமை டிஸ்னி+ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.