கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தின் வழியே சென்று வந்தால் கிருமி நாசினி நம் மீது தெளிக்கப்படும். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
