கடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. அப்படியே டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஹேசல் ஷைனி. தனது கியூட்டான Expression-கள் மூலம் பிரபலம் அடைந்த பிறகுதான் தெரியும் அவர் மைனா, சாட்டை, கும்கி போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே.
இந்நிலையில் டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு இன்ஸ்ட்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அவரை லட்சக்கணக்கான மக்கள் பாலோ செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நபரை பற்றி அவர் வெளிப்படுத்தினார். பெண் பிரபலங்கள் மற்றும் நடிகைகளை மிகவும் மோசமாக சித்தரித்து மீம்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வந்த நபரின் id-யை வெளிப்படுத்தி அவர் "இவன் ஒரு கேவலமான ஆள். சிறிய வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோசமாக சித்தரித்து அவன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறான். அனைவரும் அவனது இந்த பேஜ்ஜை ரிப்போர்ட் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பெண்களுக்கு அச்சுறுத்தலான நபர்களை தைரியமாக வெளிப்படுத்திய ஹேசல் ஷைனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.