"அஜித் சார் நீங்கள் தான் BEST".. 'துணிவு' படத்தின் வில்லன் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | விஜய் வீட்டில் இருந்து வந்த சாப்பாடு.. ருசித்து சாப்பிட்ட ரஷ்மிகா! சமையல் யாருனு பாருங்க 😍

பொங்கலை முன்னிட்டு இன்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தில் பிரதான வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " என்னை இவ்வளவு தூரம் வரை வர தூண்டியதற்கு நன்றி அஜித்குமார் சார். நீங்கள் சிறந்தவர். உங்களை போல் யாரும் இல்லை. உங்களுடன் மீண்டும் ஸ்கிரீன் ஸ்பேஸைப் பகிர்வது பெருமையாக இருந்தது." என ஜான் கொக்கன் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களை,

"உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் துணிவு படத்தை பார்க்கவும்." என‌ அந்த பதிவில் ஜான் கொக்கன் கேட்டுக் கொண்டார்.

Also Read | வாரிசு FDFS.. தாய்லாந்தில் இருந்து செனனை வந்து படம் பார்த்த கீர்த்தி சுரேஷ் 😍

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Villain John Kokken Latest Post about Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, John Kokken, John Kokken Latest Post, Thunivu, Thunivu Villain will find this news story useful.