அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "என் மாஸ்டருக்கு சல்யூட்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. கமல்ஹாசன் உருக்கம்..!
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.
துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் துணிவு படம் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் பிரபல நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் & தெலுங்கு மொழிகளில் துணிவு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
Also Read | "உங்களால் என் குழந்தை பருவம்".. இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு A.R. ரஹ்மான் இரங்கல்!