பிரம்மாண்ட பாலிவுட் படத்தில் இணைந்த 'துணிவு' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்! செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. அதிரடி போஸ்டருடன் வெளியான புதிய ரிலீஸ் தேதி!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

தேசிய விருது வென்ற சுப்ரீம் சுந்தர் ஏற்கனவே ஐயப்பனும் கோஷியும், தள்ளுமல்லா, பீஷ்ம பர்வம் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் ஆவார்.  இவர் தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் அனிமல் படத்தில் தான் சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சி இயக்குனராக பணிபுரிய உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்ரீம் சுந்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் இந்தி ரீமேக் கபீர் சிங்கின் மூலம் மிகப் பெரிய பிளாக்பஸ்டரை வழங்கியவர்.  பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து இப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம்  தயாரிக்கின்றனர். ரன்பீர் கபூர் ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் மாஸ் BTS ஸ்டில்!

Thunivu Stunt Master Supreme Sundar Bollywood Debut

People looking for online information on Supreme Sundar, Supreme Sundar Bollywood Debut, Thunivu Stunt Master will find this news story useful.