துணிவு படத்துல சமுத்திரக்கனி இந்த ROLE -ல தான் நடிக்கிறாரா? செம்ம போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | THUNIVU: போலீஸ் கெட்டப்பில் செம்ம லுக்கில் நடிகர் பக்ஸ்.. துணிவு படத்தின் அடுத்த அதிரடி போஸ்டர்!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார்.

இச்சூழலில் துணிவு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது தயாரிப்பு தரப்பில் இருந்து துணிவு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தேசிய விருது வென்ற பிரபல நடிகர் சமுத்திரக்கனி காவல்துறை அதிகாரியாக தயாளன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கேரக்டர் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Also Read | 'துணிவு' படத்தில் 'வேம்புலி' ஜான் கொக்கன் & வீரா.. எந்த கேரக்டர்ல நடிக்கிறாங்கனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Samuthirakani Character Look Poster Released

People looking for online information on Ajith Kumar, Samuthirakani, Thunivu will find this news story useful.