துபாய் வானத்தில் பறந்து 'துணிவு' படத்தின் வேறலெவல் ப்ரோமோஷன்.. செம்ம வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | தாத்தாவான தயாரிப்பாளர் 'கோபுரம்' அன்புச் செழியன்.. மகள் சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்தது 😍

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார். விவேகா பாடல் வரிகளை சபீருடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்நிலையில் துணிவு படத்தின் விளம்பர பதாகையை ஏந்தியபடி  துபாய் வானத்தில் ஸ்கை டைவிங் செய்து   ப்ரோமோஷன் செய்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. லைக்கா நிறுவனம் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி பல ப்ரோமோஷன் நிகழ்வுகள் துவங்க உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | "நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட".. TTF வாசனை புகழ்ந்து தள்ளிய G.P. முத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Movie UAE Sky Dive Promotion Video goes viral

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie UAE Sky Dive Promotion will find this news story useful.