துணிவு படத்தின் அடுத்த பெரிய அப்டேட்.. எப்போ? அஜித்தின் மாஸ் போஸ்டருடன் போனி கபூர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | "நம்மால் முடிந்ததை".. தனது LATEST புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து கூறிய சமந்தா!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார்.

இச்சூழலில் துணிவு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் "துணிவு படத்தின் அடுத்த மிகப்பெரிய அப்டேட் நாளை வெளியாகும்" என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்குமார் தோன்றியுள்ள படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஒருபாதி அஜித்குமாரின் உருவ படமும் மற்றொரு புறம் துப்பாக்கியும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

 

Also Read | 2022-ன் சிறந்த தருணங்கள்.. மனைவியுடன் இருக்கும் UNSEEN போட்டோக்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Movie New Poster Big Update Tomorrow

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie New Poster will find this news story useful.