THUNIVU: கனடா, ஆஸி & நியூசி. தியேட்டர் ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் கனடா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து தியேட்டர் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | அந்த மனசு தான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்து போட்டோ எடுத்த விஜய்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் கனடா நாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல யார்க் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா & நியூசிலாந்து நாடுகளின் தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை Vansan Movies நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. ஒட்டுமொத்த ஐரோப்பிய உரிமையை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Movie Canada Theatrical Rights Bagged by York Cinemas

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie Canada Theatrical Rights, Thunivu Movie updates, York Cinemas will find this news story useful.