துணிவா பைக் ஓட்டுறாங்களே.!! டூ வீலர் லைசென்ஸ் எடுத்த நம்ம 'கண்மணி' மஞ்சு வாரியர்.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

Advertising
>
Advertising

தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசாகி உள்ள துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் அ. வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தினை மஞ்சு வாரியர், முதல் நாள் முதல் காட்சியாக கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸ் திரையரங்கில்  ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் மஞ்சு வாரியர் எர்ணாகுளம் காக்காநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுக்க  வந்திருந்தார்.

எர்ணாகுளம் அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுக்க காலை முதலே நூற்றுக்கணக்கானோர்  ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் வந்திருந்தனர்.  மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.ஆர். ராஜேஷ் நடிகை மஞ்சு வாரியரை அழைத்து தேர்வு நடத்தினார்.

மஞ்சு வாரியர், பஜாஜ் எம் 80 பைக்கில் எட்டு போட்டார்.  மோட்டார் வாகன ஆய்வாளர் பி.ஏ. ஸ்டான்லி, கே.எஸ். சனீஷ் தலைமையில் இந்த சோதனை பணிகள் நிறைவடைந்தன. மஞ்சு வாரியரும் அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டில் மஞ்சு வாரியர் திருச்சூரில் நான்கு சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மஞ்சு வாரியரை கண்டதும் அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Manju Warrier to get two wheeler driving licence

People looking for online information on Manju Warrier, Thunivu will find this news story useful.