FIFA WORLD CUP மேட்சில் யுவன்.. துணிவு T-சர்ட் அணிந்து பிரபல வினியோகஸ்தர்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் வினியோகஸ்தர் & யுவன் ஷங்கர் ராஜா ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை கண்டு களித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போல.. பிரபல முன்னணி நடிகையின் தெறிக்கும் உலகக் கோப்பை கொண்டாட்டம்.. VIDEO

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் & இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மலேசியா வினியோகஸ்தர் மாலிக் & அவரது குழந்தைகள், துணிவு படத்தின் டிசைன் உடைய டி - சர்ட் அணிந்து உலக கோப்பை கால்பந்து போட்டியினை கண்டு ரசித்தனர். இவர்களுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அமர்ந்திருக்கும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'OPPENHEIMER'.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Malasiya Distributor with Yuvan At FIFA World Cup Final

People looking for online information on Ajith Kumar, FIFA World Cup, FIFA World Cup Final, Thunivu, Thunivu Malasiya Distributor, Yuvan will find this news story useful.