"தன்மையான மனிதர்".!! துணிவு லுக்கில் அஜித்.. பிரபல நடிகரின் மேனேஜர் பகிர்ந்த PICS..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரை பிரபல நடிகரின் மேனேஜர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Thunivu John Kokken Manager Kannan Met AjithKumar
Advertising
>
Advertising

Also Read | ஜனனி - விக்ரமன் வழக்கில் அசீமின் பரபர வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!  

வலிமை படத்துக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கனின் மேனேஜர் கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் குமாருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த நாள் மிகவும் அற்புதமான நாள். நான் இதுவரை சந்தித்த மனிதர்களில் மிகவும் தன்மையான மனிதர்களில் ஒருவர் அஜித்குமார் சார் தான். என்னவொரு கேரக்டர் அவர்! அஜித் ஒரு Gem". என கண்ணன் பதிவிட்டுள்ளார்.

துணிவு படத்தின் லுக்கில் வெண்ணிற உடையணிந்து நடிகர் அஜித் நவநாகரீக தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

Also Read | "2 வாரமா கேக்குறேன்ல".. ஃபோன் நம்பர் கேட்டு அடம்பிடித்த ராபர்ட் .. ரச்சிதா சொன்ன பதில்.. bigg boss 6 Tamil

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu John Kokken Manager Kannan Met AjithKumar

People looking for online information on Ajith Kumar, John Kokken, Kannan, Thunivu will find this news story useful.