"வாரிசுல இந்த 2 பாட்டுமே பிடிக்கும்".. "நானும் தமனும்".. மனம் திறந்த ஜிப்ரான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் ரிலீஸை தொடர்ந்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ஜிப்ரான் பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "KING அஜித்குமார்.. BLOCKBUSTER".. 'துணிவு' படம் பார்த்த PHOTO-வை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு மற்றும் இசையமைப்பாளர் தமன் குறித்த கேள்விக்கும் ஜிப்ரான் பதில் அளித்தார். ஜிப்ரான் கூறியதாவது, "வாரிசு படத்தில் Soul of Varisu, ரஞ்சிதமே பாடல் இரண்டுமே பிடிக்கும். 20 வருஷத்துக்கு முன்னாடி தமன் கீ போர்டு வாசிக்கும் போது நானும் அந்த ஸ்டூடியோவில் கீ போர்டு வாசிச்சு இருக்கேன். அவரை அப்போ சந்திச்சு இருக்கேன். ஆல்பமாவும் படமாகவும் தமன் இதில் ஜெயிக்கனும்." என ஜிப்ரான் கூறினார்.

Also Read | 'துணிவு' படத்தில் இன்னும் 5 TRACK.. OST ரிலீஸ் எப்போ? ஜிப்ரான் கொடுத்த EXCLUSIVE தகவல்!

"வாரிசுல இந்த 2 பாட்டுமே பிடிக்கும்".. "நானும் தமனும்".. மனம் திறந்த ஜிப்ரான்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ghibran about VARISU Movie Songs

People looking for online information on Ajith Kumar, Ghibran, Thunivu, Thunivu Ghibran, VARISU Movie Songs will find this news story useful.