"நிறையா பட்டாசு வாங்கி வைங்க".. துணிவு படத்தின் DOP பகிர்ந்த வைரல் ட்வீட்! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | PS2: சோழ பேரரசின் மணிமுடி.. பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர் லுக்   

இந்த படத்தின் போஸ்டர்கள் & சிங்கிள் பாடல்கள்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ISC தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், இப்போ சிலவற்றை பார்த்தேன். பட்டாசு வாங்கி கொள்ளுங்கள். கூடுதலாக நிறைய பட்டாசுகளை வாங்கி வைங்க" என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டை பகிர்ந்து அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் டிரெய்லர் & படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு நிரவ் ஷா ட்வீட் செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் தனது ROLE பற்றி பேசிய G.P. முத்து..

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu DOP Nirav Shah ISC tweet about buy extra crackers

People looking for online information on Ajith Kumar, Nirav shah, Nirav Shah ISC tweet, Thunivu will find this news story useful.